'பேரன்பு' படத்தின் பாடல் வெளியீட்டு விழா எளிமையாக அதே சமயம் திரைப் பிரமுகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடைபெற்றது. ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, 'தங்க மீன்கள்' சாதனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி உள்ளது இப்படம். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை வாங்கிக் குவித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நடை பெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அமீர், இனி தமிழில் உள்ள அனைத்து இயக்குநர்களுக்குமே ராம்தான் குரு என்று பாராட்டினார். "ஒரு திரைப்படத்திற்குப் பெயர் வைக்கும்போது அதன் இயக்குநருடைய குணாதிசயமும் இயல்பாகவே வெளி வரும். அனைத்து இயக்குநர்களுமே தாங்கள் இயக்கும் கதையை முடிவு செய்த பிறகு தலைப்பை யோசிப்பார்கள். "இதன்மூலம் அவர்கள் எதை நோக்கிப் போகிறார்கள் என்பது தெரிய வரும். உதாரணமாக இயக்குநர் மிஷ்கின் தன் படத்துக்குப் 'பிசாசு' என்று தலைப்பு வைத்தார் அல்லவா? அது போல," என்று அமீர் கூறியபோது கைத்தட்டலும் சிரிப்புமாக அரங்கம் அதிர்ந்தது.
'பேரன்பு' என்ற தலைப்பை வைக் கும் ஒரு மனிதனுக்குள் எப்படிப்பட்ட ஒரு பெரிய சிந்தனை இருக்கும்? நாம் அனைவருமே மாற்றுத் திறனாளி களைப் பார்த்திருப்போம். எனினும், அவர்களைக் கடந்து போய்விடுவோம். அந்த மாற்றுத் திறனாளியின் பார்வையில் இந்த உலகத்தைப் பார்ப்பது என்பது மிகப் பெரிய விஷயம். "ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் ணின் பெற்றோர் இந்தச் சமூகத்தில் எப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ராம் தனது பார்வையில், கோணத்தில் சொல்லி இருப்பதுதான் இந்தப் பேரன்பு," என்றார் அமீர்.
'பேரன்பு' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள்.