சிங்கப்பூரில் உள்ள ஆகப் பெரிய சுகாதாராப் பராமரிப்பு குழுமமான சிங்ஹெல்த் பெரியதொரு இணையத் தாக்குதலுக்குக் குறி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் லீ சியன் லூங் உள் ளிட்ட 1.5 மில்லியன் நோயாளி களின் சொந்த விவரங்கள் திரு டப்பட்டது சிங்கப்பூரின் ஆக மோசமான இணையத் தாக்குதல் ஆகும். நடந்த விவரங்கள் குறித்து பொதுமக்கள் ஐந்து அம்சங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். 1. என்ன நடந்தது? 2015 மே 1ஆம் தேதி முதல் இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி வரை சிங்ஹெல்த் சிறப்பு வெளி நோயாளி மருந்தகங்களுக்கும் பலதுறை மருந்தகங்களுக்கும் சென்ற 1.5 மில்லியன் நோயாளி களின் சொந்த விவரங்கள் சட்ட விரோதமாக ஊடுருவப்பட்டு நகல் எடுக்கப்பட்டன.
பெயர், அடையாள அட்டை எண், முகவரி, பாலினம், இனம், பிறந்த தேதி போன்ற விவரங்கள் அவை. இவர்களில் 160,000 பேருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விவரங்களும் திருடப்பட்டுள்ளன. இது நன்கு திட்டமிடப்பட்டு குறிவைத்து நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் என அதி காரிகள் தெரிவித்தனர். குறிப் பாக பிரதமர் லீ தொடர்பான சொந்த விவரங்களும் அவருக்கு வழங்கப்பட்ட மருந்து பற்றிய தக வல்களும் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டன. 2. இணையத் தாக்குதல் எவ் வாறு கண்டறியப்பட்டது? பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களின் கணினி கட்ட மைப்பை நிர்வகிக்கும் ஒருங் கிணைக்கப்பட்ட சுகாதாரத் தக வல் அமைப்பின் தரவு நிர்வாகிப் பாளர்கள் இம்மாதம் (ஜூலை) 4ஆம் தேதி சிங்ஹெல்த் கணினி தரவு தளங்களில் ஒன்றில் வழக் கத்திற்கு மாறான நடவடிக்கையை கண்டறிந்தனர். அதுதொடர்பாக விசாரித்த அவர்கள் கூடுதல் இணையப் பாதுகாப்பு முன்னெச் சரிக்கை அம்சங்களை ஏற்படுத் தினர்.