வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.13 என இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று வீழ்ச்சி கண்டது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் காரணமாக சீன நாணயமான யுவான் மதிப்பு சரிவு கண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான யுவான் மதிப்பு நேற்று மேலும் 0.28% குறைந்து, ஒரு டாலருக்கு 6.7943 யுவான் என்றா னது. கடந்த ஓராண்டில் இதுவே ஆகப் பெரும் சரிவு என்று தெரி விக்கப்பட்டது. அந்தத் தாக்கம் இந்திய ரூபாய் மதிப்பிலும் எதிரொலித்து வரு கிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 43 காசுகள் குறைந்து, ஒரு டாலருக்கு 69.05 ரூபாய் என முடிவடைந்தது. அந்தச் சரிவு நேற்றும் நீடித்தது. காலையில் ஒரு டாலருக்கு 69.13 ரூபாய் எனச் சரிந்தபோதும் பின்னர் அது ஒன்பது காசுகள் உயர்ந்து 68.96 ரூபாய் என்றானது. ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை கள் எடுத்து வரும் நிலையில் வர்த்தகர்கள் அதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதோடு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நேற்று நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமும் அந்நியச் செலாவணிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி யதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்தபோதும் பங்குச் சந்தையில் அது பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நண்பகல் 12.20 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை 205 புள்ளிகளும் தேசிய பங்குச் சந்தை 60 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. கடந்த மாதம் 28ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.10 என்றானதே முந்தைய ஆகக் குறைந்த மதிப்பாக இருந்தது. இதையடுத்து, ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்ச்சி காணலாம் என எதிர்பார்த்து, இறக்குமதியாளர்கள் தங்களிடம் இருந்த இந்திய ரூபாயை அமெரிக்க டாலர்களாக மாற்ற பெரும் ஆர்வம் காட்டிய தாக நாணய மாற்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மிக மோச மாகச் செயல்பட்டு வரும் ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று. இவ்வாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை எட்டு விழுக்காடு இறக்கம் கண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!