கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் மரணமடைந்த சம்பவம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரயில் சுரங்கப் பாதையில் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய இரண்டு சம்பவங்களுக்காக எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு $1.9 மில்லியன் அளவிலான அபராதம் விதிக்கப் படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், ரயில் சுரங்க வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட 16,500 ரயில் பயணிகள் பாதிக் கப்பட்டுள்ளது இங்கு நினைவுகூரப்படுகிறது.
இரு பயிற்சி ஊழியர்கள் மரணமடைந்த சம்பவம் குறித்த விசாரணையில், எஸ்எம்ஆர்டி பணிக்குழு ரயில் பயண நேரங் களில் ரயில் தடத் துக்கு ஊழிய ர்கள் செல்வது குறித்த நடை முறைகளைக் கடைப் பிடிக்கவி ல்லை என்று நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறி யது-. "ரயில் ஊழியர்களின் பாது காப்பு, உடல்நலன் போன்ற அம்சங்க ளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இந்தக் குறை பாடுகளால் கூடுதல் பாதிப்பு ஏற்ப ட்டது," என்று ஆணையம் விளக்கி யது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நடந்த அந்த சம்பவத்தில் சமிக்ஞை கோளாறு இருக்கக்கூடும் என நினைத்து ரயில் தடத்தில் சோதனை செய்ய இரு ஊழியர்கள் பணியில் ஈடுப ட்டனர்.
பின்னர் அவர்கள்மீது ரயில் மோதியதில் அவர்கள் இறந்தனர். இந்த சம்பவத்துக்காக எஸ்எம் ஆர்டி நிறுனத்துக்கு $400,000 அபராதம் விதிக்கப்படும்.