சேகர் ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகள்

சென்னை: மணல் படுகை மன் னன் சேகர் ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டி கிடைத் தது எப்படி என்பது தொடர்பாக வருவாய் புலனாய்வுத் துறை விசா ரணை தொடங்கி இருக்கிறது. சேகர் ரெட்டியின் வீட்டிலும் அலுவலகங்களிலும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது ரூ.34 கோடிக்கு 2,000 புதிய ரூபாய் நோட்டுகளும் ஏராளமான சொத்து ஆவணங்களும் ரொக்க பணமும் பல்வேறு வகை சொத் துக்களும் கைப்பற்றப்பட்டன.

அவற்றுடன் 178 கிலோ தங்கக் கட்டிகளையும் அதிகாரிகள் கைப் பற்றினர். அவற்றில் 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகள் ஆகும். இவை எந்த வருமானத்தில் வாங்கப்பட்டவை என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டிகளாக இருப்பதால், அது கடத்தலாகக் கருதப்பட்டு இதன் தொடர்பிலும் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தங்கக் கட்டிகளில் சுயூசி என்ற ஆங்கில முத்திரை உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் தங்கத்தில்தான் இந்த முத்திரைகள் இருக்கும். ஒவ்வொரு கட்டியும் ஒரு கிலோ எடை கொண்டதாக இருந் தது. ஒரு கிலோ எடையில் இந்தி யாவில் தங்கக் கட்டிகள் தயாரிப்ப தில்லை. எனவே, இந்தத் தங்கக் கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுங்க வரிகளோ, அபராதமோ கட்டியதற்கான எந்த வித ஆதாரங்களையும் சேகர் ரெட்டி வருமான வரித் துறையிடம் கொடுக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!