லண்டன்: உலகிலேயே ஆக விலைமிக்க கோல்காப்பாளராகி உள்ளார் பிரேசிலைச் சேர்ந்த 25 வயது அலிசன் பெக்கர். அவர் நேற்று முன்தினம் லிவர்பூலில் இணைந்தார். லிவர்பூலுடனான 115 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள ஒப்பந்தத்தில் அலிசன் கையெழுத்திட்டுள்ளார். கடந்த பருவத்தில் அலிசன் இத்தாலிய லீக்கில் போட்டியிடும் ரோமாவுக்காக 37 ஆட்டங்களில் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலிசன் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு ரோமா தகுதி பெற முக்கிய காரணமாக இருந்தார். அரையிறுதியில் லிவர்பூலிடம் ரோமா தோற்று வெளியேறியது.
அதுமட்டுமல்லாது, அண்மை யில் நடந்து முடிந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி யில் பிரேசிலுக்காக கோல் காப்பாளராக அலிசன் விளை யாடினார். காலிறுதி வரை சென்ற பிரேசில் பெல்ஜியத்திடம் 2=1 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கிண்ணப் போட்டியில் அலிசன் மிக அருமையாக விளையாடி உலகெங்கும் உள்ள காற்பந்துக் குழுக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அவரை ஒப்பந்தம் செய்ய செல்சியும் விரும்பியதாக அறியப்படுகிறது. ஆனால் அவரை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் எடுத்த முயற்சி வெற்றி கண்டது.