நடிகர் விஜய்யின் வெற்றிக்குக் காரணம் அவரது அமைதிதான் என்று புகழ்ந்திருக்கிறார் இசை யமைப்பாளர் கார்த்திக். அண்மைக்காலங்களில் நடிகர் விஜய்யின் படம் அவ்வளவு எளிதாக வெளியீடு ஆவது இல்லை. பல்வேறு பிரச்சினை களைச் சந்திக்கிறது. ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அசராமல் எதிர்கொண்டு வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறார்.
அண்மையில் ஒரு மேடையில் விஜய் பேசுகையில், "வெற்றிக்குப் பின்னால் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ இருப்பார்கள் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருக் கேன். ஆனால் என் வெற்றிக்குப் பின்னால் நிறைய அவமானங்களே இருந்தன. அதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டிருந்தால் இன்று என்னால் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியாது" என்று கூறினார். இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியின் தாரக மந்திரம். நடிகர் விஜய் தற்பொழுது நடித்துக்கொண்டு இருக்கும் படத்தின் பெயர் 'சர்க்கார்'. இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியில் விஜய் புகைபிடிப்பதுபோல் வெளியானதும் அதற்கு பல தரப்புகளிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்தன.
பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்த நிலையில், "திரைப் படங்களைப் பார்த்து யாரும் தவறு செய்வதில்லை. விஜய்யை மட்டும் எதிர்ப்பது ஏன்?" என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார் டி.ராஜேந்தர். அதோடு இப்படி சொல்பவர்கள் சிகரெட்டையே நிறுத்தவேண்டும் என்று அரசுக்கு எதிராக போராட வேண்டியதுதானே என்றும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து, 'ஜூங்கா' படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது விஜய் சேதுபதி பேசும்போது, "என் அப்பா சிகரெட் பிடிப்பார். ஆனால் நான் புகைபிடிக்கமாட்டேன். அதே போல் பல படங்களில் நடிகர்கள் புகைபிடிப்பதைப் பார்த்திருக் கிறேன். ஆனால் நான் அதை செய்யவில்லை.