'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் அந்தப் படத்தில் பொருத்தமான ஜோடி யாக இருந்த பிரபாஸ், அனுஷ்கா இருவரும் முக்கிய காரணம். பிரபாஸ் வீரமான ஆண் மகனாய் வலிமையுடன் அசத்த, அனுஷ்கா வீரத்துடனும் அழகுடனும் ஜொலித்தார். அவர் களைப் பற்றி 'பாகுபலி' காலத்தி லிருந்தே காதல் வதந்தியும் திருமண வதந்தியும் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் அனுஷ்காவின் அம்மா அந்தப் பொருத்தமான ஜோடி பற்றி அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். "அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
திரையில் அவர்கள் மிகவும் அழகான ஜோடி. பிரபாஸ் போன்ற ஒரு மருமகனை அடைய ஒவ்வோர் அம்மாவும் விரும்புவார்கள். ஆனால் அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்களது திருமணம் பற்றிய வதந்திகளை தகவல் சாதனங்கள் தவிர்க்க வேண்டும்," என்று கூறியிருக் கிறார். 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'பாகமதி' படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின் வேறு எந்தப் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் 'சாஹோ' படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக் கிறார்.