போலிஸ்: தினகரன் காட்டம் சென்னை: தங்கள் கட்சியினர் மீது காவல்துறை பொய் வழக்கு களைப் பதிவு செய்து வருவதாக அமமுக துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் புகார் எழுப்பியுள்ளார். இத்தகைய அநியாயத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவ தாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். "தஞ்சை மாவட்டம் பழவேற் காடு ஊராட்சியில் 10 ஆண்டுக ளாக ஊராட்சி மன்றத் தலைவ ராகப் பணியாற்றி வரும் குமர செல்வம் காவல்துறையின் அடக்கு முறைக்கு உள்ளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
"கடந்த 17ஆம் தேதி காவல் துறை தம்மைக் கைது செய்தபோது மிகுந்த மனவேதனை அடைந்த அவர், வாகனத்தில் ஏற்றப்படும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தெரிவித்தும் போலிசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்," என்று தினகரன் தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் குமரசெல்வம் மரணமடைந்துள் ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மாற்றுத்திறனாளியான குமரசெல்வத்தின் மரணத்துக்கு அதிமுக அரசும் காவல்துறையுமே முழுக் காரணம் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருவ தாகப் புகார் எழுப்பியுள்ள அவர், அமமுகவினர் மீது அதிமுக அரசு வெஞ்சினத்தை வெளியிடுவதா கவும் சாடியுள்ளார். "மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பை மறந்துவிட்டு அமமுக வினர் மீது பொய் வழக்குப் புனை யும் பழனிசாமி அரசின் உத்தரவின் பேரில் ஏவல்துறையாகச் செயல் படும் காவல்துறைக்குக் கண்டனம் தெ ரி வி த் து க் கொ ள் கி றே ன் , " என்று தினகரன் மேலும் தெரி வித்துள்ளார்.