ஹனோய்: வியட்னாமில் கடந்த சில நாட்களாப் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும் அங்கு வீசிய பலத்த புயல் காற்றிலும் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வியட்னாமை கடும் புயல் தாக்கியுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஹனோய் உட்பட பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இயற்கை பேரிடரில் 10 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்னும் 11 பேரை காணவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வெள்ளப் பெருக்கிலும் நிலச்சரிவிலும் சுமார் 4,000 வீடுகள் சேதம் அடைந்த தாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள பயிர் நிலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்களும் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்தன. படம்: ஏஎஃப்பி