கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை கண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெற வுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடி வுற்ற நிலையில் மூன்று வேட்பாளர் கள் அத்தொகுதியில் போட்டி யிடுகின்றனர். நேற்று முன்தினம் வரை பக்கத்தான் ஹரப்பானுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி புதுமுகமான கெஅடிலானைச் (பிகேஆர்) சேர்ந்த முகமட் சவாவி அகமட் முக்னி என்பவரை வேட்பாளராக நிறுத்தி யுள்ளது. இவர் கெஅடிலான் கட்சியின் சமய புரிந்துணர்வு மேம்பாட்டுப் பிரிவின் செயலாளர் ஆவார்.
தேசிய முன்னணி, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாமை களம் இறக்கியுள்ளது. அவ்விரு வேட் பாளர்களும் நேற்று காலை 9 மணியளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த நிலையில் சற்றும் எதிர்பாரா விதமாக 9.30 மணிக்கு அங்கு வந்த மூர்த்தி கிருஷ்ணசாமி அவரது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார்.