இணைய தாக்குதலைத் தொடர்ந்து சிங்ஹெல்த் குழுமம், 2015ஆம் ஆண்டு மே 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதிக்கும் இடையே தனது நிபுணத்துவ வெளி நோயாளி மருந்தகங்களுக்கு வந்திருக்கும் 700,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்குக் குறுந்தகவல் அனுப்பியுள்ளது. அந்நோயாளிகளின் தனிப் பட்ட தரவுகள் திருடப்பட்டதா என்பது குறித்து சிங்ஹெல்த் அவர்களிடம் தெரிவித்து வரு கிறது.
ஊடுருவலால் நோயாளிகள் கவலை அடைந்தது குறித்து சிங்ஹெல்த் எந்த நிபந்தனை யின்றி மன்னிப்பு கேட்பதாக நேற்று வெளியிட்ட தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. நோயாளிகளின் தொலைபேசி எண், நிதி விவரம் அல்லது மற்ற மருந்து விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என்று சிங்கப்பூரில் உள்ள ஆகப் பெரிய சுகாதார நிறுவனமான சிங் ஹெல்த் உறுதியளிப்பதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளது. மீதம் பேருக்கான குறுந்தக வல்கள் அடுத்த இரண்டு நாட்க ளுக்குள் அனுப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா என்பதை அறிய சுமார் 139,000 நோயாளிகள் 'ஹெல்த் பட்டி' கைத்தொலைபேசிச் செயலி வழியாகவும் சிங்ஹெல்த் இணையத்தளம் வழியாகவும் தெரிந்துகொண்டதாக அந்நிறு வனம் கூறியது.