சிங்ஹெல்த் தாக்குதல் ‘மிகவும் அதிநவீனமானது’

சிங்ஹெல்த் நிறுவனத்தின் மீதான இணையத் தாக்குதலைப் பற்றி விளக்கமளித்த இணையப் பாது காப்பு அமைப்பின் தலைவர் டேவிட் கோ, அதனை நடத்திய ஊடுருவிகளை, வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் திருடர்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். வீட்டின் சன்னலை உடைத்து அதற்குள் நுழைவது போல், சிங்ஹெல்த்தின் அலுவலகத்தில் உள்ள கணினி ஒன்றைப் பயன் படுத்தி ஊடுருவிகள் தரவுத் தளத்திற்குள் புகுந்ததாக அவர் கூறினார்.

பிரதமர் லீ சியன் லூங்கின் தனிப்பட்ட மருத்துவ விவரங் களைப் பெறுவதில் ஊடுருவிகள் குறியாய் இருந்ததாக திரு கோ சொன்னார். திரு லீ பற்றிய விவ ரங்களைப் பெற அந்த ஊடுருவிகள் தரவுத் தளத்தைப் புரட்டிக்கொண்டி ருந்தபோது அவர்கள் சுமார் 1.5 மில்லியன் நோயாளிகளின் தனிப் பட்ட தரவுகளைத் திருடினர். அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. மறைச்சொல் விவரங்களைத் திருடிய பின்னர் அந்த ஊடுருவிகள், தங்களது அத்து மீறலுக்கான அறிகுறிகளை அழித்து, தரவுத்தளத்திற்குள் மீண்டும் நுழைவதற்கான மாற்று வழிகளைத் தேடினர். ஜூலை 4ஆம் தேதியன்று அவர்களின் செயல்களை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

ஆற்றல்வாய்ந்த ஊடுருவி ஒரு வர் இந்தத் தாக்குதலை நடத்தி யிருக்கலாம் என்று 'வீகீ' பாது காப்புத் தீர்வு நிறுவனத்தின் தலை வரும் இணை நிறுவனருமான திரு ஜோசஃப் கான் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் டேவிட் கோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!