ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம்

கேத்ரின் தெரசாவிற்கு பலர் காதல் கடிதங்கள் மூலமாகவும் நேரிலும் காதலிப்பதாகக் கூறுகிறார்களாம். ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் திருமணம். அதுவரை காத்திருக்கவேண்டும் என்று கூறுகிறார் கேத்ரின் தெரசா. கார்த்திக் ஜோடியாக 'மெட்ராஸ்' படத்தில் நடித்துப் பிரபலமானவர் கேத்ரின் தெரசா. 'கதகளி', 'கணிதன்', 'கடம்பன்', 'கதாநாயகன்', 'கலகலப்பு-2' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிப்பதற்கு முன்பு இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தார். இவர் துபாயில் பிறந்து வளர்ந்தவர். பள்ளிப் படிப்பை துபாயில் முடித்தார். இந்தியா வந்து கல்லூரி படிப்பைப் பெங்களூரில் முடித்தார்.

அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில், "தமிழ்ப் படங்களில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. சில படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் அதுவும் பெருமையாகவே இருந்தது. எனக்கு நடனம் தெரியும். சிறுவயதில் இருந்தே நடனம் கற்று இருக்கிறேன். அதனால் படங்களில் சிறப்பாக ஆட முடிகிறது. எனது நடனம் நன்றாக இருப்பதாக பாராட்டுகளும் கிடைக்கின்றன.

"தமிழில் அதிக பட வாய்ப்புகள் வருவதால் தமிழ் கற்று வருகிறேன். காதல் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கிறது. பார்த்ததும் வருவது காதல் இல்லை. ஒருவரைப் பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இவருடன் வாழவேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். வாழ்க்கைக்குத் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையும் ஏற்படவேண்டும். அதுதான் காதல். அந்தக் காதல்தான் நிலைக்கும். "கண்டதும் பிறக்கும் காதல் எல்லாம் பாதியிலேயே அறுந்துவிடும். எனக்கு யார் மீதும் இதுவரை காதல் வரவில்லை. ஆனாலும் என்னை நிறைய பேர் காதலிப்பதாக சொல்லி அணுகினார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டேன். ஐந்து ஆண்டு கழித்தே திருமணம் செய்து கொள்வேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளியே செல்லாமல் வீட்டில் இருக்கத்தான் எனக்குப் பிடிக்கும்," என்றார் கேத்ரின் தெரசா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!