பொது சுகாதாரப் பராமரிப்பு நிலை யங்களில் பணியாற்றுவோர் இணையத் தொடர்புகளிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுவர். ஆக மோசமான இணையத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு களைக் கடுமையாக்கும் ஒரு முயற்சியாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிங்கப்பூர் பொது மருத்துவ மனை உள்ளிட்ட நான்கு மருத்துவ மனைகள், ஐந்து தேசிய சிறப்பு மருத்துவ நிலையங்கள், எட்டு பலதுறை மருந்தகங்கள் ஆகிய வற்றை நடத்தும் சிங்ஹெல்த், இணையத் துண்டிப்பை ஏற் கெனவே தொடங்கிவிட்டது. கடந்த வியாழக்கிழமை நள் ளிரவு முதல் அந்நிலையங்களில் இணையத் தொடர்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதர சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களான தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல் கலைக்கழக சுகாதார முறை ஆகியன அடுத்த வார தொடக்கத் தில் இணையத் துண்டிப்பு நட வடிக்கையை மேற்கொள்ளும். அதன் பின்னர் பணியாளர்கள் தங்களது வேலையிடத்து கணினி களிலிருந்து இணையத் தொடர்பை மேற்கொள்ள இயலாது. இவ்வாறு மருத்துவ நிலையங் கள் தங்களது உள்கட்டமைப்பை இணையத்திலிருந்து துண்டிப்பது என்பது அவ்வளவு எளிய செய லன்று என சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறினார். இப்படிச் செய்வது நோயாளி களிடத்திலும் மருத்துவ நிபுணர் களிடத்திலும் தாக்கங்களை ஏற் படுத்தும் என்றார் அவர்.