இன்றைய பட்டதாரிகள் ஆயுள் முழுவதும் கற்கும் நடைமுறை யைத் தழுவிக்கொள்ளவேண்டிய தேவை இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத் திக் கூறியிருக்கிறார். தொழில்நுட்ப நவீனங்கள் பல தொழில்துறைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின் றன. இதனால் வேலைகள் பாதிக் கப்படுகின்றன. இதன் காரணமாக இன்றைய பட்டதாரிகள் கல்விக் கூடங்களுக்குத் திரும்பவும் செல்லவேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் கற்க வேண் டியிருக்கும் பட்சத்தில், வேலைக் குச் செல்வதற்கு முன்பாக தேவைப்படக்கூடிய அறிவும் தேர்ச்சியும் என்ன என்று கேட்டால் அதற்கு உடனடி பதில் எதுவும் கிடையாது என்றார் அமைச்சர். உலகம் முழுவதும் உள்ள பல் கலைக்கழகங்கள் இத்தகைய ஒரு பிரச்சினையையே எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இருந்தாலும் இதற்குத் தீர்வு காண்பதில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முன்னணியில் திகழ்கிறது என்றார் அமைச்சர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விருந்தில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் கலந்துகொண்டார். படம்: சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்