அதிபர் சவால் நிதி அறப்பணி பிரியாணி நிகழ்ச்சி 19வது ஆண்டாக நேற்று நடந்தது. சிங்கப்பூரில் இருக்கும் எல்லா பள்ளிவாசல்களும் கூட்டாகச் சேர்ந்து அதிபர் சவால் நிதிக்கு நன்கொடை வழங்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். உதவி தேவைப்படுவோருக்குச் சமூகம் ஒன்றாகச் சேர்ந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் உதவ முடிகிறது என்பதை அதிபர் சுட்டிக்காட்டினார். அதிபர் சவால் நிதி, உதவி தேவைப்படும் 59 அமைப்பு களுக்காகத் திரட்டப்படுகிறது. ஆண்டுதோறும் எல்லா பள்ளிவாசல்களும் சேர்ந்து சமூக சேவையாற்றுவதை அதிபர் பாராட்டினார். இந்த அறப்பணி பிரியாணி நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத பொறுப்பாதரவாளர் களும் பங்கெடுத்துக்கொண்டது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அதிபர் ஹலிமா கூறினார்.
காலித் பள்ளிவாசலில் நேற்று நடந்த அதிபர் சவால் நிதி அறப்பணி பிரியாணி நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் கலந்துகொண்டு பிரியாணி கிண்டினார். இரண்டு நன்கொடை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விருந்தினர்களுக்குப் பிரியாணி கொடுத்து அதிபர் உபசரித்தார். படம்: இக்பால் ஃபைசல்