பொதுச் சேவை ஆணையத்தின் கல்வி உபகாரச் சம்பளம் பெற்ற ஹரிஷ்

எஸ்.வெங்கடேஷ்வரன்

பொதுச் சேவை ஆணையத்தின் உப காரச் சம்பளம் வழங்கும் விழா ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 93 மாணவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார். "தற்போது கல்வி நிதி உதவி பெற்றவர்கள், எதிர்கால பொதுச் சேவை அதிகாரிகள் ஆவார்கள். இவர் கள் சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவ மைத்து நம் நாட்டின் முன்னேற்றத்தை வழிநடத்துவார்கள். சிங்கப்பூர் சீரும் சிறப்புமாக இருக்க, நமக்குப் பல துறை களில் திறமைசாலிகள் வேண்டும்.

சவால்களைச் சமாளித்து சிங்கப் பூரைத் தரமான நிலையில் வைத்திருக்க அவர்களுக்குத் தேவையான கல்வி, திறன்கள், தகுதிகள் வேண்டும்," என்றார் அமைச்சர் சான். பொது நிர்வாகம், சீருடைக் குழுக்கள், நிபுணத்துவ சேவை ஆகிய மூன்று தொழில்துறை பிரிவுகளில் உபகாரச் சம்பளங்கள் வழங்கப்பட்டன.

உபகாரச் சம்பளங்கள் பெற்ற வர்களில் ஒருவர் திரு ஹரிஷ் வாட்சன், 19. தேசிய சேவையின் முதல் மூன்று மாதங்களில் வீரர்கள் பங்கேற்கும் அடிப்படை ராணுவப் பயிற்சியை அண்மையில் இவர் முடித்தார். அடுத்து, 'லண்டன் ஸ்கூல் ஆஃப் இக்கனாமிக்ஸ்' பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டப் படிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளார் திரு ஹரிஷ்.

அவரது படிப்புக்கான செலவை பொதுச் சேவை ஆணையத்தின் உபகாரச் சம்பளம் ஏற்கும். மேலும், தினசரி செலவுகள், தங்கும் வசதி களுக்கான கட்டணம், பிற செலவுகள் போன்றவற்றுக்காக கூடுதல் உதவித் தொகையும் வழங்கப்படும். "படிக்கும் காலத்தில் சமூக சேவை புரிய எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. முதியோர், வசதி குறைந்த மாணவர்கள் ஆகியோருக்கு எதிர் காலத்தில் உதவி புரிய விரும்புகிறேன். "பொருளியல் பாடக் கல்வி கற்கவிருப்பதால் தேசிய அளவில் கொள்கைககளை வகுத்து, தேவை யானவர்களுக்கு என்னால் உதவி புரிய முடியும் என்று நம்புகிறேன்," என் றார் திரு ஹரிஷ்.

ராஃபிள்ஸ் உயர்நிலைப் பள்ளி யிலும் தொடக்கக் கல்லூரியிலும் படித் தவர் திரு ஹரிஷ். தொடக்கக் கல்லூரியில் பொருளியல் துறைப் பாடத்தை 'எச்2', 'எச்3' நிலைகளில் ஹரிஷ் படித்தார். மேல்நிலைத் தேர்வில் இவ்விரண்டு பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார் ஹரிஷ்.

பட்டப் படிப்பு முடிந்தவுடன் பொதுச் சேவையில் ஆறு ஆண்டு காலத்திற்குப் பணிபுரிய வேண்டும் என்பது இந்த உபகாரச் சம்பளத்தின் நிபந்தனை. எதிர்காலத்தில் வர்த்தக, தொழில் துறையிலோ நிதித் துறையிலோ பணிபுரிய ஆசைப்படுகிறார் திரு ஹரிஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!