பார்வையாளர்களை ஈர்க்க புயலை ‘உருவாக்கிய’ படக்குழு

பல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளின்படி, உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலையின் காரணத்தால் துருவப் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இந்நிலையில், நம் அன்றாட வாழ்வுக்கும் நமக்கு நெருக்கமான வர்களுக்கும் எதிர்காலத்தில் எம்மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? என்பதை 'கடல்' குறும்படம் விவரிக்கும்.

நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரியிலிருந்து அண்மையில் பட்டயம் பெற்ற தமிழ் மாணவர் களால் தயாரிக்கப் பட்டிருக்கும் 'கடல்' எனும் குறும்படம், இரண்டாவது முறையாக நடை பெறும் 'தெமாசெக் 20/20' என்ற குறும்படப் போட்டியில் இடம் பெற்றுள்ள படைப்புகளில் ஒன் றாகும்.

'கடல்' குறும்படத் தயாரிப்பு சுகாதாரச் சீரழிவு என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. "இக்குறும் படம் பார்வை யாளர்களின் மனதில் பதிய வேண்டும். இதன் மூலம் பாமர மக்களும் இப்பிரச்சி னையின் தாக்கத்தைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களது இலக்காக இருந்தது," என்றார் அக்குறும்படத் தின் துணை எழுத்தாளரான லாவண்யா கிருஷ்ணா, 24. இவ்விளையர்கள் கடந்து வந்துள்ள பாதையில் பல்வேறு சவால்கள் நிறைந்து இருந்தன. கதை உருவாக்கத்தை மட்டுமே கிட்டத்தட்ட ஆறுலிருந்து ஏழு மாதங்கள் வரை எடுத்ததாகக் கூறினார் 'கடல்' குறும்படத்தின் இயக்குனர் மா. பார்த்திபன்.

கதையின் தாக்கத்தை இன்னும் வலுப்படுத்த, செயற்கைப் புயல், மழையை உண்டாக்கும் ஒரு கருவியை இவர்கள் பயன் படுத்தினர். "பார்வையாளர்களை உலுக் கக்கூடிய அளவிற்கு கதையில் ஒரு நிகழ்வு இடம்பெற வேண்டியிருந்தது. இதன் அடிப் படையில்தான் நாங்கள் குறும் படத்தில் ஒரு புயல் காட்சியைச் சேர்க்க முடிவு செய்தோம். செலவு சற்று அதிகமானாலும் வேண்டிய அளவுக்கு தாக்கத்தை உண்டாக்கு வதற்கு அக்காட்சி அவசியமான ஒன்றாக இருந்தது," என்றார் பார்த்திபன், 25.

விருப்பத்திற்கு ஏற்ற முறையில் குறும்படத் தயாரிப்பைப் படைப் பதற்கு 'கடல்' தயாரிப்புக் குழு வினருக்குத் தெமாசெக் நிறுவனத் தால் வழங்கப்பட்ட $20,000 நிதி போதுமானதாக இல்லை. கூடுதலாகத் தேவைப்பட்ட நிதியைத் திரட்டுவதற்காக பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டனர் அந்த இளையர்கள்.

பார்வையாளர்களுக்கு மாறு பட்ட அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, முதுமைப் பருவத்தில் ஒன்றாக வாழ்ந்து வரும் இரு சகோதரர் களைப் பற்றிய ஒரு தத்ரூபமான கதையை 'கடல்' தயாரிப்புக் குழு உருவாக்கியது. அதன் இரு முக்கிய கதாபாத்திரங்களாக நடித்தவர்கள் அனுபவம் நிறைந்த உள்ளூர் தொலைக்காட்சி நடிகர் களான பன்னீர் செல்வம், ஜெயராம் ராமையா ஆகியோர். 'கடல்' குறும்படத்தின் படப் பிடிப்பு மலேசியாவின் கோலா லம்பூர் நகரிலும் சிங்கப்பூரின் 'புலாவ் உபின்' தீவிலும் நடை பெற்றது.

"படத்தின் ஒளிப்பதிவாளரான, தேவ மணிகண்டனின் ஏற்பாட்டில் எங்களால் மலேசியாவிற்குச் சென்று 'கடல்' படபிடிப்பை மேற் கொள்ள முடிந்தது. மலேசியாவில் ஷான் எஸ். இமான், சிங்கப்பூரில் அப்துல் காதர் ஆகியோரின் உதவியால் படப்பிடிப்பை சுமுகமாக செய்து முடிக்க முடிந்தது," என்றார் பார்த்திபன். திரைப்படத் தயாரிப்பின் மீது இருந்த அளவில்லா பற்றும் சமூகத்திற்கு நல்லதொரு கருத் தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையும் தங்களைத் தொடர்ந்து போராட ஊக்குவித்த தாக குழுவினர் குறிப்பிட்டனர். குழுவுக்கு ஆலோசகராக இருந்த பூ ஜுன் ஃபெங்கின் வழி காட்டலும் 'கடல்' குறும்படத் தயா ரிப்பிற்கு உறுதுணையாய் இருந்த தாக அவ்விளையர்கள் கூறினர்.

"சிங்கப்பூரில் திரைப்பட இயக்கத் துறையில் லாபம் காண்பது கடினமான ஒன்று என்று சிலர் கருதக்கூடும். ஆனால் இம்மாதிரியான கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை. ஆர்வம் இருந்தால் எதற்கும் அஞ்சாமல் நம்முடைய திறனை வளர்த்துக்கொண்டு கனவுகளை நனவாக்க முன்வர வேண்டும்," என்றார் பார்த்திபன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!