படைப்பாற்றலை மேம்படுத்திய பயிலரங்குகள்

ருபனேஸ்வரன் ஞானசுப்பிரமணியம்

இளையர்களுக்கு எழுத்தின் வெவ்வேறு பரிமாணங்களில் நல்ல புழக்கத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு 'நானும் ஒரு படைப்பாளி' நிகழ்ச்சி இவ்வாண்டு மீண்டும் நடத்தப் பட்டது. பாடத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு, தாய்மொழிகள் பகுதியின் தமிழ்த்துறை ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியின் வெற்றி விழா, இம்மாதம் 14ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. மாணவர்களது படைப்பாற்றலை மேம்படுத்துவதற்காக இவ்வாண் டின் 'நானும் ஒரு படைப்பாளி' நிகழ்ச்சி சிறுகதைகள், திரைக் கதைகள், கவிதைகள் ஆகிய மூன்று மாறுபட்ட அங்கங்களைக் கொண்டிருந்தது. சிறுகதைகள் எழுதும் அங்க மும் திரைக்கதைகள் தயாரிக்கும் அங்கமும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப் பட்டது.

அனைத்துப் பிரிவுகளில் பயி லும் மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும் என்பதில் இவ் வாண்டு அதிக கவனம் செலுத்திய தாகக் குறிப்பிட்டார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும் கல்வி அமைச்சின் மூத்த பாடத்திட்டக் குழுவின் அதிகாரியுமான திரு கு.சரவணன், 46. இதன் அடிப்படையில், உயர் நிலைப் பள்ளிகளிலிருந்து வந்த ஒவ்வொரு குழுவிலும் வழக்க நிலை தொழில்நுட்பப் பிரிவில் படிக்கும் மாணவர்களும் சேர்ந்து பங்குபெற ஏற்பாடு செய்யப்பட்டது. "தொழில்நுட்பப் பிரிவிலிருந்து வரும் உயர்நிலை மாணவர்களின் திறன்களை அறிந்து, அதை வளர்ப்பது இந்த ஆண்டு நிகழ்ச்சி யின் முக்கிய அம்சமாக இருந் தது," என்றார் திரு சரவணன்.

230க்கும் மேற்பட்ட மாணவர் கள் இவ்வாண்டின் 'நானும் ஒரு படைப்பாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்வந்தனர். தொடர்ச்சியான இரண்டு பயி லரங்குகளில் பங்கேற்ற மாணவர் கள் பல்வேறு பயிற்சிகளையும் அனுபவமிக்க எழுத்தாளர்கள், இயக்குநர்களிடமிருந்து வழிகாட் டலையும் பெற்றனர். அதற்குப் பிறகு, இவ்விரண்டு பயிலரங்குகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற சுமார் 100 மாணவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றில் தங்களது படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளத் தேர்ந்தெடுக் கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் களைத் தங்களது இறுதிப் படைப்புகளுக்காக தயார் செய்யும் வகையில், அவர்களுக்கு மூன்றா வதாக ஒரு பயிலரங்கும் நடத்தப் பட்டது.

"திரைக்கதைப் பயிலரங்கில் நாங்கள் நிறைய கதைகளை எழுதி அவற்றை எவ்வாறு திரைப்படங்களாகத் தயாரிக் கிறார்கள் என்பதை பற்றி கற்றுக் கொண்டோம். பயிற்சிகள் பெற்ற பிறகு நாங்கள் ஓர் இரண்டு நிமிடக் காணொளி யைத் தயாரிக்க வேண்டியிருந்தது," என்று தமிழ் முரசிடம் கூறினார் ஆங்கிலோ சீனப் பள்ளி (பார்க்கர் சாலை) மாணவரான விஷ்ணு மணிமாறன், 14. அத்துடன், இந்த ஆண்டு கவிதைகள் எழுதும் அங்கத்தின் வாயிலாக முதன்முறையாக தொடக்கக் கல்லூரி மாணவர் களுக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு அளிக்கப்பட்டது.

"இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் மிகவும் புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. நாம் எழுதுகிற கவிதைகளை நாமே படைப்பதற்கு ஒரு வாய்ப்பு இந்நிகழ்ச்சியின் மூலம் எனக்குக் கிட்டியது. "வாசகர்களுக்கு இந்தக் கவி தைகளைக் கொண்டு சேர்ப்பது எப்படி, எந்த மாதிரியான சமூகக் கருத்துகளைக் கவிதைகளின் வழியாக வெளிப்படுத்தலாம் என்பது போன்ற நுணுக்கங்களை நான் தெரிந்துகொண்டேன்," என்று கூறினார் விக்டோரியா தொடக்க கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் சே.சேவாள், 18.

"நானும் ஒரு படைப்பாளி" நிகழ்ச்சியின் வெற்றி விழாவில், இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்கம் அல்லது வெள்ளி விருது கள் வழங்கப்பட்டன. அந்த வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட முனைவர் சுப. திண்ணப்பன் எழுத்தின் சிறப்பையும் நல்ல படைப்பாற்றலை வளர்த்துக்கொள் ளும் உத்திமுறைகளைப் பற்றியும் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். "சிறந்த படைப்புக்கு நான்கு வழிகள் உள்ளன. முதலில், படித்து அறிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக, படிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

"மூன்றாவது, படித்ததை வாழ்க் கையில் பயன்படுத்த முற்பட வேண்டும். நான்காவதாக, தாம் படித்ததை வைத்துப் புதிய படைப்பு களை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். சிந்தனைத் திறனுடன் பயிற்சியும் சேரும்போது படைப் பாற்றல் ஆதிகரிக்கிறது," என்று தமது உரையில் குறிப்பிட்டார் முனைவர் சுப. திண்ணப்பன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!