அமெரிக்கப் பேரங்காடியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடிக்குள் பலரையும் பிணையாக பிடித்துவைத்துக் கொண்ட துப்பாக்கிக்காரர் ஒரு மாதை சுட்டுக்கொன்றுவிட்டார். பிறகு தனக்குத்தானே கைவிலங்கு போட்டுக்கொண்டு அந்த நபர் சரணடைந்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது. இதற்கு முன்னதாக, அந்தச் சந்தேகப் பேர்வழி குடும்ப சச்சரவு ஒன்றில் ஈடுபட்டதாகவும் அந்த நபர், தன்னுடைய பாட்டியையும் ஒரு மாதையும் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலிஸ் அதிகாரி பேரி மோன்ட்கோமெரி செய்தியாளரிடம் கூறினார். பிறகு அந்த நபர், தன் பாட்டியின் வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியுடன் வாகனத்தை ஓட்டிச்சென்று டிரேடர் ஜோ என்ற பேரங்காடிக்குள் நுழைந்தார். அவரை போலிஸ் துரத்தியது. அந்தக் கடைக்கு வெளியேயும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கடைக்குள் பலரையும் அவர் பிணையாக பிடித்துவைத்துக் கொண்டார். அங்கு ஒரு மாது சுடப்பட்டு இறந்தார். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தன்னைத் தானே கைவிலங்கு போட்டுக் கொண்டு அந்த நபர் போலிசிடம் சரணடைந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!