பாரிஸ்: கயிற்றின்மேல் நடப்பது எளிதான காரியமல்ல. அதிலும் உயரத்தில் இருந்து கயிற்றின் மேல் நடப்பது என்பது கரணம் தப்பினால் மரணம். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்தச் சவால்மிக்க நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் குமாரி டடியேனா மோசியா பொங்கோங்கா. நிகழ்ச்சி ஒன்றின் ஒத்திகை யின்போது செவ்விசை ஒலிக்க, 35 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் அவர் கவனம் சிதறாமல் நடந்து தமது இலக்கை அடைந்தார். இந்த நிகழ்ச்சிக்காகக் கடந்த ஓராண்டாக அவர் தம்மைத் தயார்ப்படுத்தி வருவதாக தெரி விக்கப்பட்டது. குமாரி பொங்கோங்கா எட்டு வயதிலிருந்து கயிற்றின் மேல் நடக்கும் சாகசத்தைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனம் சிதறாமல் கயிற்றின் மேல் நடந்து செல்லும் டடியேன் மோசியோ பொங்கோங்கா. படம்: ராய்ட்டர்ஸ்