கோத்தா கினபாலு: சாபா மலேசியா வுக்குச் சொந்தமான பகுதி என்று அந்நாடு வலியுறுத்தியுள்ளது. சாபா பிலிப்பீன்சுக்குச் சொந்த மானது என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டேவின் ஆலோச கரான திரு அக்கியூலினோ பிமென்ட் டேல் ஜூனியர் தொடர்ந்து கூறி வருகிறார். 1987ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பிலிப்பீன்ஸ் அரச மைப்பை மறுஆய்வு செய்ய திரு பிமென்ட்டேல் ஜூனியர் நியமிக் கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் மலேசியாவுக்கு அதிருப்தி தரும் வகையில் மீண்டும் அந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் தெரிவித்தார்.
"சாபாவை பிலிப்பீன்ஸ் சொந்தம் கொண்டாட அனைத்துலகச் சட்டத் தின்கீழ் வழி இருக்க வேண்டும். சாபா எங்களுக்குச் சொந்தமானது என்று சொல்வதை நாங்கள் ஒத்திவைக்க லாம். ஆனால் சொந்தம் கொண் டாடுவதைக் கைவிடும் எண்ணம் இல்லை," என்றார் திரு பிமென்ட்டேல். திரு பிமென்ட்டேலின் பரிந்துரை யின்படி பிலிப்பீன்ஸ் 12 கூட்டரசு மாநிலங்களாகப் பிரிக்கப்படும். பிலிப்பீன்ஸின் 13வது கூட்டரசு மாநிலமாக சாபா ஒருநாள் மாறக் கூடும் என்று திரு பிமென்ட்டேல் தெரிவித்தார். "சாபா மீது பிலிப்பீன்சுக்கு உரிமை இருக்கிறது என்பதை உறுதி செய்ததும் அதை எங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். "சாபா மட்டுமல்ல, ஸ்கார்பரோ, பென்ஹம் ரைஸ், ஸ்பிராட்லிஸ் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் என்று அவர் கூறினார். ஸ்கார்பரோ, பென்ஹம் ரைஸ், ஸ்பிராட்லிஸ் ஆகிய இடங்களை பிலிப்பீன்சும் சீனாவும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. 2018-07-23 06:00:00 +0800