தனது வங்கி முகப்புப் பணிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதி அள வுக்குக் குறைக்க ஓசிபிசி வங்கி தீர்மானித்திருப்பதாக அறிவித்துள் ளது. சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கிக் குழுமத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள 51 வங்கிக் கிளைகளை நடத்தும் ஓசிபிசி, முகப்புப் பணிகளிலிருந்து நிறுத் தப்படும் ஊழியர்கள் மறுபயிற்சி அளிக்கப்பட்டு, ஆலோசனைப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. தனது வங்கி முகப்புகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்க ளுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுக ளில் மறுபயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர்கள் பின்னர் மின் னலக்க அல்லது ஆலோசனை அளிக்கும் பணிகளில் அமர்த்தப் படுவர் என்றும் ஓசிபிசி விவரித் தது.
புதிய ஏடிஎம் சாதனங்களுக்காகவும் மின்னிலக்க சேவை கூடங்களுக் காகவும் ஓசிபிசி வங்கி $14 மில்லியனை ஒதுக்கியுள்ளது. படம்: ஓசிபிசி வங்கி