காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 23 பேர் உயிரிழந்தனர். விமான நிலையம் அருகில் வெடித்த வெடிகுண்டு காரண மாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மாண்டவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்புப் படையையும் போக்கு வரத்து போலிஸ் படையையும் சேர்ந்த வர்கள் என்று காபூல் போலிஸ் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். தாக்குதலில் குழந்தை ஒன்று மாண்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. நாடு கடத்தப்பட்டிருந்த ஆப்கான் துணை அதிபர் அப்துல் ரஷீத் டோஸ்டம் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் திரும்பினார். அவரை வரவேற்க காபூல் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் பலர் திரண் டனர். திரு டோஸ்டமை விமான நிலையத்தில் சந்தித்து, நலம் விசாரித்த பிறகு மூத்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலை வர்கள் ஆகியோர் அங்கிருந்து கிளம்பிச் சென்றபோது குண்டு வெடித்தது.
வெடிகுண்டு வெடித்ததில் பலர் காயமுற்றனர். காயம் அடைந்தவர்கள் தரையில் கிடக்க, அவ்விடத்தில் பதற்றநிலை ஏற்பட்டது. கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அவற்றைத் தடுக்கவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்