ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் 'மரகதக்காடு'. அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலை யாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர காடும் அருவி யும் முக்கிய பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரிகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் சாலைகள் விரிவடைய காடுகள் அழிக்கப்படும் அநீதி பற்றி இந்தப் படம் பேசுகிறதாம். "படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் வனப்பகுதி வழியாக பசுமை வழிச்சாலை அமைக்க அரசு முழுமூச்சுடன் முனைப்பு காட்டி வருகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது," என்கிறார் மங்களேஷ்வரன்.
இந்தக் கருத்தை மையமாக வைத்தே தனது படத்தை உருவாக்கி இருப்பதாகக் குறிப்பிடுபவர், பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிமங்களை எடுப்பதாகக் கூறிக்கொண்டு இயற் கையை அழிக்கும் அவலம் குறித்து தனது படம் பேசும் என்கிறார். "ஒரு காட்டை உருவாக்குவதுதான் கஷ்டம். காட்டை நாடாக்குவது ரொம் பவே சுலபம். காட்டை அழிப்பதற்கு ஆறு மாதங்கள் போதும். "இதோ இப்போது பசுமை வழிச்சாலை அமைக்கிறோம் என்கின்ற பெயரில் அதுதான் நடக்கிறது. அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை என்று சொல்வது தான் சரியாக இருக்கும். "நான் எடுத்து வைத்திருக்கும் படம் இயற்கை வளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம். இத்திட்டத்தை நான் எதிர்க்கா விட்டால் என் படத்திற்கே துரோகம் செய்வது போலாகிவிடும். படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கி றோம்," என்கிறார் மங்களேஷ்வரன்.
'மரகதக்காடு' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.