வைதேகி ஆறுமுகம்
வாழ்நாள் கற்றலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை திருவாட்டி ரத்னம் பெரியோசாமி உணர்த்து கிறார். அந்த வகையில் 82 வயது நிரம்பிய திருவாட்டி ரத்னம் தம் வயதை ஒரு தடையாகக் கரு தாமல் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள திறன்பேசி, கணினிப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றார். அதிவேகமாக வளர்ந்து வரும் இந்நவீன உலகத்தில் பல முதி யோர்கள் தொழில்நுட்ப முன்னேற் றத்துடன் தாக்குப்பிடிக்க சிரமப் படுகின்றனர். சாதாரண நோக்கியா கைபேசி யைப் பயன்படுத்திய திருவாட்டி ரத்னத்துக்குத் திறன்பேசியைப் பயன்படுத்தும் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் ஆகியோருடன் பிணைப்பை வலுப்படுத்த கடின மாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், வயது முதிர்ந்த காலத்தில் தனிமை உட் பட்ட பிரச்சினைகளால் மனவுளைச் சலுக்கு ஆளாகி விடுவோமோ என்ற எண்ணமும் திருவாட்டி ரத் னத்தை அச்சுறுத்திக் கொண்டிருந் தது. வேலைக்குச் செல்லும் பிள் ளைகளுடனும் பள்ளிக்குச் செல் லும் பேரக்குழந்தைகளுடனும் இணைய, ஒரு தளத்தை அவர் தேடிக் கொண்டிருந்தார்.
வாம்போ டியூ மூத்தோர் நடவடிக்கை நிலையத்தின் திறப்பு விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ்விடம் திறன்பேசி, கணினிப் பயிற்சி வகுப்புகளில் தாம் கற்றவற்றைச் செய்து காட்டுகிறார் திருவாட்டி ரத்னம் பெரியோசாமி. படம்: ராஜமோகன்