பினாங்கில் கை, கால், வாய்ப் புண் நோய்

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கை, கால், வாய்ப் புண் நோய் பரவி வருவது குறித்து அம்மாநிலத்தின் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பினாங்கில் உள்ள பேரங் காடிகளில் இருக்கும் தள்ளு வண்டிகளில் கை, கால், வாய்ப் புண் நோயை உண்டாக்கும் கிருமி கள் இருப்பது தெரிய வந்தது. தள்ளுவண்டிகளின் கைப்பிடி களிலும் பேரங்காடிகளில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பகுதி களிலும் இந்நோய்க்கான கிருமி கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடைத்தொகுதிகள் அவற்றின் தள்ளுவண்டிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என பினாங்கு மாநிலத்தின் சுகாதாரத் துறை கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. கை, கால், வாய்ப் புண் நோயினால் பாதிக்கப்பட்டிருப் போரின் உடலிலிருந்து வெளி யாகும் சளி, எச்சில், மலம், திரவங்கள் ஆகியவை வாயிலாக இந்த நோய் பரவுகிறது. ஒருவர் அந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவரி டமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!