வியந்தியன்: லாவோஸில் கட்டப்பட்டு வரும் அணை ஒன்று இடிந்து விழுந்ததில் நூற் று க் கணக்கானோரைக் காணவில்லை. அவர்களில் பலர் மாண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. லாவோஸின் தென் கிழக்குப் பகுதியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட இருந்த அணை நேற்று முன்தினம் இரவு உடைந்தது. லாவோஸில் பல நதிகள் உள்ளன. அந்த நாட்டில் ஏற்கெனவே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகள் வாயி லாக மின்சாரத்தை உற்பத்தி செய்து தாய்லாந்து போன்ற பக்கத்து நாடுகளுக்கு விற் கிறது வாலோஸ். அணை உடைந்ததில் ஐந்து பில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தண்ணீர் சுற்றி உள்ள இடங்களைப் பதம் பார்த்தது. அணையிலிருந்து வெளி யேறிய தண்ணீரின் அளவு இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் அளவுக்குச் சமம்.
அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பாதிப்படைந்துள்ளனர். படம்: அத்தப்பாவ் டுடே/ஃபேஸ்புக்