செங்காங், பொங்கோல் வட்டாரத் தில் குடியிருப்போர் வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் பாலர் பள்ளிகளில் மேலும் 2,600 இடங்களை எதிர்பார்க்கலாம். இந்த வட்டாரங்களில் ஐந்து பெரிய குழந்தைப் பாரமரிப்பு நிலை யங்கள் அமைக்கப்படவுள் ளன. ஏற்கெனவே இவ்வட்டாரங்களில் அமைந்துள்ள நிலையங்களுடன் இந்தப் புதிய நிலையங்களும் இணைவதால், பாலர்களுக்கு கூடுதலான இடங்கள் இருக்கும். இவற்றில் நான்கு நிலையங் களில் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 300 முதல் 550 இடங்களைக் கொண்டிருக்கும். இந்த நான்கும் செங்காங்கில் அமையும். 650 இடங் கள் கொண்ட பெரிய நிலை யம் பொங்கோலில் அமைகிறது.
ஆரம்பகால குழந்தைப்பருவ மேம்பாட்டு முகவை நியமிக்கும் பாலர் பள்ளிகளை நடத்தும் பிர தான நிறுவனங்கள் இந்த புதிய நிலையங்களைச் செயல்படுத்தும். செங்காங் ரிவர்சைட் பூங்கா விலுள்ள 'ஸ்கூல்4கிட்ஸ்' பள்ளி யின் குழந்தைப் பாராமரிப்பு நிலைய த்தை நேற்று திறந்துவைத்துப் பேசியபோது சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இதனை அறிவித்தார்.
செங்காங் ரிவர்சைட் பூங்காவிலுள்ள 'ஸ்கூல்4கிட்ஸ்' பள்ளி யில் மாணவர்கள் விளையாடுகிறார்கள். 2018ல் செயல்படத்தொடங்கும் என அறிவிக்கப்பட்ட பெரியளவிலான நான்கு குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் ஒன்றான இந்த நிலையத்தை சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று திறந்துவைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்