ஆங் பூன் தியோங், 76, தனது 67 வயது மனைவி திருவாட்டி கான் சூன் ஹாரைத் தள்ளி அவரை காயப்படுத்தியதற்காக அவருக்கு ஏழு நாள் குறுகிய கால தடுப்புக் காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிற்கு எதிராக அவரது மனைவி 2010ல் தனிநபர் பாதுகாப்பு ஆணையைப் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆணையை மீறிய குற்றத்தையும் தம் மனைவியைத் தாக்கிய குற்றத்தையும் ஆங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 1-0ஆம் தேதி ஆங் தனது வீட்டிற்குச் சில பொருட்களை எடுத்துவந்தார். வீட்டில் நடமாட்டத்திற்கு இடையூறாக இருந்த அந்தப் பொருட்களை திருவாட்டி கான் ஒதுக்கிவைத்தார். இதனால் கோபமடைந்த ஆங் திருவாட்டி கானின் கையை முறுக்கினார்.
ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் திருவாட்டி கானை ஆங் உடலுறவுக்கு அழைத்தபோது அவர் மறுத்ததால் ஆங் அவரை கீழே தள்ளினார். அதனால் திருவாட்டி கானுக்குச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. இரண்டு நாட்கள் கழித்து திருவாட்டி கான் பிடோக் பலதுறை மருந்தகத்தில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதும், அந்த தண்டனையிலிருந்து விடுதலையடைந்த பிறகு அவருக்கு இது தொடர்பான குற்றவியல் பதிவு இருக்காது.