சாங்கி சிறைச்சாலை வளாகத்திலுள்ள 'ஏ4' கல்வி நிலையம், சிங்கப்பூரின் பெண் கைதிகளுக்கு ஓரே நிலையமாக உள்ளது. நிலையத்தை நேற்று பார்வையிட்ட அதிபர் ஹலிமா யாக்கோப், கைதி களைத் தாம் சந்தித்து பேசிய தாகத் தெரிவித்தார். அந்தக் கைதிகள் மீண்டுவருவதற்குப் குடும்ப ஆதரவு பக்கபலமாய் இருந்ததாக அவர் தெரிவித்தார். குற்றங்களைச் செய்தவர் களுக்கு சிறைவாசம் தேவைப் படுகிறது. ஆனால் அவர்களைத் திருத்துவதற்கு சிறை மட்டும் போதாது என்றும் பலனளிக் கக்கூடிய மறுவாழ்வுத் திட்டம் அவசியம் என்றும் அவர் கூறினார்.
"இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணத் திற்கு, பெண் கைதிகளிடையே இரண்டு ஆண்டுகளில் 21-=22 விழுக்காட்டினர் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் குற்றங் களைச் செய்கின்றனர். இதற்குக் காரணம், வேலையின்மையும் சமூக ஆதரவின்மையும்," என்று அவர் கூறினார். போதைப்பொருள், குண்டர் கும்பல் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்குமாறு சிறுமி களிடமும் இளம் பெண்களிடமும் தெரிவிக்க விரும்புவதாக திருவாட்டி ஹலிமா சொன்னார்.