ஏதன்ஸ்: கிரேக்கத் தலைநகர் ஏதன்ஸ் அருகே ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 79 பேர் பலியாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிறிய குன்று ஒன்றின் மீது குழந்தைகள், பெரியவர்கள் என 26 பேர் ஒருவரையொருவர் தழுவியபடி தீக்கிரையாகி இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. தீயிலிருந்து தப்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் முன்பே அவர்களை தீ சுற்றி வளைத்து இருக்க வேண்டும் எனவும் தீயிலிருந்து தப்ப முடியாது என்பதை அறிந்து அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்க வேண்டும் எனவும் கிரேக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் நிக்கோஸ் எகோனோமோபோலஸ் கூறினார்.
கிரேக்க வரலாற்றிலேயே ஆக மோசமான தீச்சம்பவம் இது என்று கூறப்படுகிறது. கிரேக்கத்தில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப் படும் என அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். படம்: ஏஎஃப்பி