லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் ரோட்டில் ஆடவர் ஒருவர் வெட்டப்பட்டதன் தொடர் பில் சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சிங்கப்பூரர் என்று நம்பப் படும் அந்த 27 வயது இந்திய ஆடவர் பலத்த காயமுற்றார். சமையலறை கத்தியாலும் சமுராய் வாளாலும் அவரைத் தாக்கிய கும்பல் அதன் பின்னர் வாடகை கார் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பிராட்வே ஹோட்டல் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.21 மணிக்கு தங் களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித் தாளிடம் தெரிவித்தார். தலை, முதுகு, கைகள், கால்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட கடுமையான காயங் களுடன் சாலையில் கிடந்த ஆடவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு, டான் டோக் செங் மருத்துவமனை யில் சேர்த்தனர்.
அப்போது அந்த ஆடவர் நிதானத்துடன் இருந்ததாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து குவோக் கார் பெங், 41, என்னும் காணொளி தயாரிப்பாளர் கூறுகையில், "பேருந்து ஒன்றின் முன்னால் ஆடவர் கிடந்ததைக் கண்டேன். சாலை விபத்தாக இருக்கலாம் என்று கருதினேன்.
பிராட்வே ஹோட்டலின் முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காயங்களுடன் ஆடவர் கிடந்ததாக பகிரப்பட்ட படம். இச்சம்பவத்தில் தப்பிய கும்பலை போலிஸ் தேடுகிறது. படம்: சமூக ஊடகம்