லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் ரோட்டில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கும்பல் தாக்குதல் சம்ப வத்தின் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 17 வய துக்கும் 28 வயதுக்கும் இடைப் பட்ட சிங்கப்பூரர்கள். தீவு முழு வதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட் டையின் பலனாக ஜூரோங்கில் உள்ள கார்ப்பரேஷன் ரோடு அரு கிலும் சின் மிங் தொழிற் பேட்டை புளோக் 26லும் அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக போலிஸ் தெரி வித்தது.
சிராங்கூன் ரோட்டில் பிராட்வே ஹோட்டல் முன்புறமுள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் 27 வயது ஆடவர் தாக்கப்பட்டார். சமையலறைக் கத் தியாலும் சமுராய் வாளாலும் அவர் வெட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக ஆடவரின் தலை, கைகள், கால்கள் ஆகிய வற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.
இதற்கிடையே, கைது செய்யப் பட்ட சந்தேக நபர்களில் ஒருவ ரான அர்ஜுன் ரெத்னவேலு, தாக் குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சமுராய் வாளை சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை 4 மணியளவில் லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்தில் வீசிவிட்டதாக நம்பப்படுகிறது. இரண்டாவது ஆயுதமான சமைய லறைக் கத்தி சம்பவ இடத்தில் தரையில் கிடந்தது. சின் மிங் தொழிற்பேட்டையில் நேற்றுக் காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டபோது அர்ஜுன் குடிபோதையில் இருந்ததாக நம் பப்படுகிறது.
சின் மிங் தொழிற்பேட்டை வளாகத்தில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் ரெத்னவேலு, சமுராய் வாள் வீசப்பட்டதாக நம்பப்படும் லோவர் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கு போலி சாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.