சென்னை: தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற காரணத்திற்காகவும் முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்திற் காகவுமே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாது காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவிகள் செய்துள் ளார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் உடல் நலமில்லாத தம்பிக்கு ராணுவத்தின் மருத்துவ அவசர விமா னத்தை நிர்மலா சீதாராமன் கொடுத்து உதவியதன் பின்ன ணியில் மாபெரும் திட்டம் இருப்பதாக தினகரன் கூறினார். "ஒரு ராணுவ அமைச்சர், அதிலும் ஒரு பெண் முதன்முத லாக ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால் பெருமைப் பட்டோம். தமிழ் பேசுகிறவர்.
ஆனால், அவரே இப்படி செய் துள்ளார். இந்திய மக்கள் இதைக் கவனித்து வருகிறார்கள். மக் களை முட்டாள்கள் என்று நினைத்தால் தேர்தலில் அது எதிரொலிக்கும். "இதைவிடப் பெரிய நகைச் சுவை என்னவென்றால் நிர்மலா சீதாராமன்தான் தமிழக முதல்வர் வேட்பாளராகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
"தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகவே பன் னீர்செல்வத்திற்கு அவர் உதவி கள் செய்துள்ளார். இரு விஷ யங்கள் இதில் தெரியவந்துள் ளது. 'அமைதிப்படை' பன்னீர் செல்வத்தை மிஸ்டர் க்ளீன், பெரிய தலைவர் என்றெல்லாம் ஊடகங்கள் எடுத்துக்காட்டின. "பன்னீர்செல்வம் பாஜக சேவகர் போல மாறியதால்தான் ஜெயலலிதா மரணமடைந்தபிறகு முதல்வராக இருந்த அவரை மாற்ற வேண்டியதாயிற்று.
"நிர்மலா சீதாராமனை அவர் காட்டிக் கொடுத்துவிட்டார் எனக் கூறுகிறார்கள். தன்னை முதல்வ ராக்கியவர்களையே காட்டிக் கொடுத்தவர் அவர். இவர்களைக் காட்டிக்கொடுக்க எவ்வளவு நேரமாகும். என்னைக் காப்பாற்ற யாருக்கும் துரோகம் செய்வேன் என்பதுதான் அவரது இயல்பு. "இது தெரியாமல் அரிச் சந்திரன், காந்தி பேரன், தியாகி போலவெல்லாம் அவரை போகஸ் செய்தனர். தெய்வம், தெய்வம் என்று யாரை கூறினாரோ அவர் மரணத்தையே கொச்சைப்படுத்தி யவர் ஓபிஎஸ். விசாரணைக் கமி ஷன் அமைக்க காரணமாக இருந்தவர். அவர் செய்த பாவங் கள் அவரை விடா. இன்னும் தொடரும்," என்று கூறியுள்ளார்.