சேலம்: பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாயைப் போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில், மேச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்த ராணி கணவரால் கைவிடப்பட்டவர். பிரசவ நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள ராணிக்கு நான்காவது குழந்தையும் பெண் ணாகவே பிறக்க, அவரை ஜெயா என்ற மருத்துவமனை ஊழியர் அணுகினார். துப்புரவு வேலை செய்யும் ஜெயா குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்றுத் தருவதாக ராணியிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மேச்சேரியில் குழந்தை கைமாறியது. இச் சம்பவம் தொடர்பாக சேலம் காவல்துறையினரின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.