ஆளுக்கு ஒரு நியாயமா என ஸ்டாலினிடம் பாஜக கேள்வி

சென்னை: ஒரே செயலுக்கு இரு விதமான முரண்பாடான கருத்து களைத் தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். ஒரே செயல். அதை ராசா செய்தால் சரி என்றும் பன்னீர்செல்வம் செய்தால் தவறு என்றும் ஸ்டாலின் கூறியுள் ளது ஏன்? எப்படி எனப் புரிய வில்லை என்று பாஜகவின் வியூக குழுச் செயலர் ஆசிர்வாதம் ஆச் சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர ருக்கு உடல்நிலை சரியில்லாமல் மதுரை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு ராணுவ மருத்துவ அவசர விமா னம் மூலம் கொண்டு வரப்பட்டார். சிகிச்சைக்கு விமானத்தை வழங்கி ராணுவ அமைச்சர் நிர் மலா சீதாராமன் உதவி இருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள ஸ்டாலின், "துணை முதல்வரின் சகோதரர் என்பதால் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானத்தைப் பயன்படுத்தலாமா? இது கடுமை யான சட்டமீறல். இந்த தவற்றைச் செய்த ஓ.பன்னீர்செல்வமும் நிர் மலா சீதாராமனும் மன்னிப்பு கோரி பதவி விலகவேண்டும்," என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித் துள்ள பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறியபோது, "இந்தியப் பிரஜையாக இருக்கும் எவருக்கும் மனிதாபிமான அடிப் படையில் இந்திய ராணுவ விமானத்தையோ ஹெலிகாப்டரையோ பயன்படுத் திக்கொள்ளச் சொல்லி உத்தரவிட ராணுவ அமைச்சருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

"இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமல்தான் ஓ.பன்னீர் செல்வம், நிர்மலா சீதாராமனை கொச்சைப்படுத்தும் விதத்தில் விமர்சித்துள்ளார் ஸ்டாலின். "தன் கட்சிக்காரரான முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வுக்கு இப்படி ராணுவ விமானத்தை பயன்படுத்தி உள்ளனர் என்பதை நன்கு தெரிந்தபின்பும் ஸ்டாலின் இப்படி விமர்சித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!