இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் பெரும் பான்மை இடங்களைக் கைப்பற்றி தாம் வெற்றி பெற்றுவிட்டதாக தாரீக் இ இன்சாஃப் கட்சியின் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முழுமையான முடிவுகள் நேற்றிரவு 9.30 மணி வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இம்ரான் கான் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக முழக்கமிட்டுள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி பாகிஸ்தான் மக்களிடம் பேசிய இம்ரான் கான், "நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். மக்கள் எங்க ளுக்கு அதிகாரத்தைத் தந்து விட்டனர்," என்று கூறினார். தாம்தான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இம்ரான் கான் முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் அவரது கட்சிக்குப் பெரும்பான்மை இடங்கள் கிடைப் பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தொலைக்காட்சியில் தோன்றி தாம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறும் இம்ரான் கான். படம்: ராய்ட்டர்ஸ்