வாஷிங்டன்: அமெரிக்க நீதிமன்ற காலக்கெடு உத்தரவின்படி, குடியேறிகளிடமிருந்து பிரிக்கப் பட்ட 1,800 குழந்தைகளை அவர் களின் குடும்பத்துடன் சேர்த்து வைத்திருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்னும் சுமார் 700 குழந்தைகள் அவர்களின் குடும்பத்துடன் சேர்த்துவைக் கப்படவில்லை என்றும் அவர்களில் 431 குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்காவில் இல்லை என்றும் டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த மாதம் சாண்டியாகோ நீதிபதி டானா சாப்ராவ் வழங்கிய தீர்ப்பில், குடியேறிகள் விவகாரம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வகுத்த கொள்கையின்படி பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட சிறார்களை ஜூலை 26ஆம் தேதிக்குள் அவர்களின் பெற்றோர்களிடம் மீண்டும் சேர்த்துவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
மெக்சிகோ-அமெரிக்கா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் முறையான ஆவணங்கள் இல்லா மல் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறி வித்திருந்தார். இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என் பதைத் தெளிவுபடுத்தி கொள்கை ஒன்றையும் அவர் வகுத்திருந்தார். அந்த கொள்கைப்படி, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் அமெரிக்கா வந்த பெற்றோர்களிடம் இருந்து 2,500 குழந்தைகள் அமெரிக்க அதிகாரிகளால் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.