ஜமீன் வாரிசாக சிவகார்த்திகேயன்

பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகும் படம் 'சீமராஜா'. இந்தப் படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ', 'வேலைக்காரன்' படங்களைத் தயாரித்த ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இமான் இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமங்களில் இப்போதும் ஜமீன்தார்கள் இருக்கிறார்கள்.

அவர்களை ஊரே ராஜாவாகத்தான் பார்க்கும். அப்படி ஒரு குடும்பத்தின் கதை. அந்தக் குடும்பத்து இளம் வாரிசு சீமராஜாவாக சிவகார்த்தி கேயன். சூரி, யோகிபாபு, அபு ஆகியோரின் நடிப்பில் சண்டைக் கலந்த நகைச்சுவை, காதல் படமாக வெளிவர இருக்கிறது 'சீமராஜா'. 'வருத்தப்படாத வாலிபர் சங்க'த்தில் சத்யராஜ், 'ரஜினி முருக'னில் ராஜ்கிரண் நடித்தது போல் இந்தப் படத்தில் சிவகார்த்தி கேயனின் தந்தையாக நெப்போலி யன் நடித்துள்ளார்.

கிராமத்தில் மாணவர்களுக்குச் சிலம்பாட்டம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக வருகிறார் சமந்தா. அவரது கதாபாத்திரத்தின் பெயர் சுதந்திரதேவி. இந்த வேடத்தில் நடிப்பதற்காக 3 மாதங்கள் வரை முறைப்படி சிலம்பம் கற்றுக் கொண்டாராம் சமந்தா. சிம்ரன்தான் இந்தப் படத்தில் முக்கியமான வில்லி. அவர் சீமராஜா குடும்பத்தை அழிக்க நினைக்கும் மற்றொரு பெரிய குடும்பத்து ராணி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!