லண்டன்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்தின் பர்ன்லி குழு யூரோப்பா லீக் ஆட்டத்தில் நேற்று முன்தினம் ஸ்காட்லாந்தின் அபர் டீனுக்கு எதிராகக் களமிறங்கியது. 51 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய நிலை போட்டியில் விளையாடிய பர்ன்லிக்கு அது ஒரு கசப்பான அனுபவமாக இருந் தது. ஆட்டத்தின்போது அபர்டீன் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் சேம் கோஸ்கிரோ மீது மோதிய தால் அக்குழுவின் கோல்காப்பாளர் நிக் போப் காயமடைந்தார். அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக அவரால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர் களமிறங்கினார்.
நிக்குக்கு ஏற்பட்ட காயம் எந்த அளவுக்கு மோசமானது என்றும் காயம் காரணமாக அவர் எத்தனை நாட்கள் விளையாட முடியாது என்றும் அறிந்துகொள்ள பர்ன்லி குழுவின் நிர்வாகம் காத்துக் கொண்டிருக்கிறது. நிக் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபர்டீனுக்கும் பர்ன்லிக்கும் இடை யிலான ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.