தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலாந்தின் ஆர்சனலும் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்டும் மோதின. ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிய, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்அவுட் நடத்தப் பட்டது. இதில் அட்லெட்டிகோ மட்ரிட் 3=1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் கோல் போட்டது. லுசியானோ வியேட்டோ தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. இடைவேளையின்போ து அட்லெட்டிகோ மட்ரிட் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு நிமிடங்களில் ஆர்சனல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. அட்லெட்டிகோ மட்ரிட்டின் தற்காப்பு ஆட்டக்காரர்களைக் கடந்து சென்ற ஆர்சனலின் 17 வயது மத்திய திடல் ஆட்டக்காரர் எமில் ஸ்மித் ரோவி, 20 மீட்டர் தூரத்திலிருந்து வலை நோக்கி பந்தை அனுப்பினார். அட்லெட்டிகோ மட்ரிட் குழு வின் கோல்காப்பாளரைக் கடந்து சென்ற பந்து வலைக்குள் புகுந்தது.
ஆர்சனலின் ஹென்ரிக் மிக்கித்தாரியனிடம் இருக்கும் பந்தைப் பறிக்க முயற்சி செய்யும் அட்லெட்டிகோ மட்ரிட்டின் ஆண்ட்ரியே சொலானோ (இடது). படம்: இபிஏ-இஎஃப்இ