மாஸ்கோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ரஷ்ய அணிக்காக விளையாடி அசத் திய அலெக்சாண்டர் குலோவின் மொனாக்கோ குழுவில் இணைந் துள்ளார். இவரின் சிறப்பான ஆட்டம் உலகக் கிண்ணப் போட்டியில் ரஷ்யா காலிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தது. சவூதி அரேபியா, எகிப்து, ஸ்பெயின் அணிகளுக்கு எதி ரான ஆட்டங்களில் ஒரு கோல் போட்ட இவர், சக வீரர்கள் இரண்டு கோல்கள் போட உதவி யாகவும் இருந்தார். காலிறுதியில் குரோஷியா விடம் பெனால்டி வாய்ப்பில் தோற்றது ரஷ்யா. சிஎஸ்கேஏ குழுவிற்காக 113 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 2016ஆம் ஆண்டில் ரஷ்ய லீக் பட்டத்தையும் வென்றார். இந்நிலையில், இங்கிலிஷ் குழுக்களான செல்சி, ஆர்சனல் குழுவிற்கு குலோவின் செல்லக் கூடும் என்று யூக செய்திகள் வலம் வந்த நிலையில், அவர் மொனாக்கோ குழுவில் சேர்ந்து உள்ளார்.
மத்திய திடல் வீரரான 22 வயது குலோவினை சுமார் 27 மில்லியன் பவுண்டுக்கு மொனாக்கோ வாங்கியுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவில் இருந்து ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பிரெஞ்சு குழுவான மொனாக்கோவிற்குச் சென்றுள்ளார் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் குலோவின். படம்: ராய்ட்டர்ஸ்