லண்டன்: பொய்யான செய்திகள் பரவுவது ஜனநாயகத்திற்கு ஒரு மிரட்டல் என்று பிரிட்டனில் நாடாளுமன்றக் குழு எச்சரித் துள்ளது. கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனத் தகவல்கள் திருடப் பட்டதைத் தொடர்ந்து பொய்யான செய்திகளை பரப்புவோரை டிஜிட்டல், கலாசார, ஊடக, விளையாட்டுத் துறை குழு விசாரணை செய்து வருகிறது. அக்குழு வெளியிடவுள்ள முதல் அறிக்கையில் சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான விதி முறைகளை எதிர்நோக்க வேண்டும் என்று யோசனை கூறப் பட்டுள்ளது.
தேர்தலில் தலையிடுவதை தடுத்து நிறுத்த உதவும் யோசனைகளும் அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்குழுவின் அறிக்கை அதிகாரபூர்வமாக இன்று வெளி யிடப்படவுள்ள நிலையில் அதன் ஒரு பிரதி வெள்ளிக்கிழமை அன்றே வெளியில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரசாரம் செய்த குழுவின் தலைவர் டோமினிக் குமிங்ஸ் அவரது வலைத்தளத்தில் அந்த அறிக்கை பற்றிய செய்திகளை வெளி யிட்டுள்ளார். அந்த விசாரணக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை யில் பங்குகொள்ளுமாறு டோமினிக் கேட்டுக்கொள்ளப்பட்ட போது அதற்கு அவர் மறுத்து விட்ட நிலையில் அந்த அறிக்கை "பொய் செய்தி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.