ப. பாலசுப்பிரமணியம்
றுவனாக இருந்தபோது கவியரசு கண்ணதாசனின் பாடல்களை இவர் கேட்கத் தொடங்கினார். 14 வயதில் அந்தப் பாடல் வரிகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முனைந்தார். 'ஜிசிஇ' சாதாரண நிலைத் தேர்வில் அந்தப் பாடல் வரிகளையும் தமது கட்டுரையில் பயன்படுத்தினார். கவியரசு கண்ணதாசனின் பாடல்களை எப்படி மாணவர்களின் கற்றல், கற்பித்தலுக்கு பயன் படுத்தலாம் எனும் ஆய்வு கட்டு ரையைத் தமது முனைவர் பட்டத் துக்காக ஒப்படைத்த ஆசிரியர் திரு எஸ்.பி.ஜெயராஜதாஸ் பாண்டி யன் முனைவர் பட்டத்தைப் பெற் றுள்ளார். நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த சிங்கப்பூர் தேசிய கல்விக் கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பெற்ற முனைவர் பட்டம், ஏழு ஆண்டுகளின் கடின உழைப்பின் பலனாகும்.
வாழ்நாள் கற்றலுக்குச் சிறந்த உதாரணமாக, கல்வி அமைச்சின் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக் கழக தமிழ் மொழிக்கான தலைமை முதன்மை ஆசிரியராக திரு ஜெயராஜதாஸ் பணியாற்றுகிறார். 1980ஆம் ஆண்டில், ஆசிரியர் பணிச் சான்றிதழோடு தம் ஆசிரி யர் பணியைத் தொடங்கி, 1990 களில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழியும் இலக் கியமும் கற்று, 2008ல்ஆம் ஆண் டில் தேசிய கல்விக் கழகப் பாட கலைத் திட்டமும், கற்றலும் கற்பித் தலும் தொடர்பிலான முதுகலை பட்டத்தை இவர் பெற்றிருந்தார். "கவியரசு கண்ணதாசனைப் பற்றி தமிழகத்தில் பலரும் ஆய்வுக் கட்டுரையை மேற்கொண்டிருந்தா லும், மாணவர்களின் கற்றல், கற் பித்தலில் அப்பாடல்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது ஒரு புது வித ஆய்வாகும். "சில சிங்கப்பூர் பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலை இரண்டாம் வகுப்பு உயர்தமிழ் மாணவர்களின் பங்கேற்பு இதில் அடங்கியுள்ளது," எனத் தெரிவித்தார் 62 வயது திரு ஜெயராஜதாஸ்.
வாழ்நாள் கற்றலுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தலைமை முதன்மை ஆசிரியர் திரு ஜெயராஜதாஸ் கடந்த வியாழக்கிழமை முனைவர் பட்டத்தைக் கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திருவாட்டி சான் லாய் ஃபாங்கிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்