தேசிய இளையர் மன்றத்தின் தலைமையில் தொடர்ந்து நடை பெறும் உரையாடல் ஒன்றில் அனைவரையும் உள்ளடக்குவது தான் தாங்கள் முக்கியப் பிரச்சினை எனக் கருதுவதாக சிங்கப்பூர் இளையர்கள் தெரிவித்துள்ளனர். இளையர்களை நாடு தொடர் பான பிரச்சினைகளைப் பற்றி கலந்தாலோசிப்பதில் ஈடுபடுத் தும் முயற்சியில் இவ்வுரையாடல் நிகழ்ந்து வருகிறது. இனம், சமூகப் பிரிவு என ஒருவரை அடையாளம் காண்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு பார்வையில் வாய்ப்பு தரும் சமுதாயத்தை இளையர்கள் விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்தது.
அத்துடன் வெவ்வேறு விருப் பங்கள், லட்சியங்கள் கொண்ட அனைவருக்கும் பொருந்தும் வகையில் வெற்றி என்ற வரையறை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் இளையர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட 1,400க்கும் மேற்பட்ட இளையர்களிடமிருந்து இணை யம்வழி கிடைத்த கருத்து சேகரிப்பின்மூலம் இவ்வாறு தெரிய வந்துள்ளது.