சென்னை: மூச்சுத்திணறல் கார ணமாக அரசுப் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தா. பாண்டியனை நேற்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டிய னுக்கு தற்போது 85 வயதாகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்குத் திடீரென மூச்சுத்திண றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பலனாக அவரது உடல்நலம் ஓர ளவு தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் நேற்று காலை அரசு மருத்துவமனைக்குச் சென்ற மு.க. ஸ்டாலின் அங்கு தா. பாண்டியனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.