ப. பாலசுப்பிரமணியம்
அமெரிக்க மிச்சிகன் விளை யாட்டு அரங்கில் 100,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலை யில் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டும் லிவர்பூலும் நேற்று சந்தித்தன. முதல் பாதியில், பெனால்ட்டி வாய்ப்பு மூலம் சாடியோ மானே அடித்த கோல் வழி லிவர்பூல் முன்னணி வகித்தது. ஆனால் அருமையான ஃப்ரி-கிக் வழி கோல் நிலையை சமநிலையாக்கினார் யுனைடெட்டின் எண்டிரியஸ் பெரேரா. இ
ரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. புதுவரவு செர் டான் ஷக்கீரி ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஏற்படுத்தித் தந்த கோல் வாய்ப்பை லிவர் பூலின் தாக்குதல் ஆட்டக்காரர் டேனியல் ஸ்தரிச் நிதானமாக கோல் வலைக்குள் புகுத்தினார். இதற்குப் பிறகு லிவர்பூலின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் மான்செஸ்டர் யுனை டெட் அணி திக்குமுக்காடியது. எல்லா திசைகளிலிருந்தும் லிவர்பூல் அணி தாக்குதல் களை மேற்கொள்ள, மற்றொரு பெனால்ட்டிக்குப் பலியானது யுனைடெட்.
அந்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட லிவர்பூலின் இளம் ஆட்டக்காரர் ஷெயி ஓஜொ மூன்றாவது கோலை போட்டார். பரமவைரியை இதோடு விட்டுவிடவில்லை லிவர்பூல். பெனால்ட்டி எல்லைக்குள் வந்த பந்தை 'ஓவர்ஹெட் கிக்' வழி வலைக்குள் ஷக்கீரி புகுத்திய விதம் லிவர்பூல் ரசிகர்களை உச்சி குளிர வைத்தது. 4-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிந்தது.
'ஓவர்ஹெட் கிக்' வழி பந்தை வலைக்குள் புகுத்தும் செர் டான் ஷக்கீரி. படம்: ஏஎஃப்பி