'பியார் பிரேமா காதல்' படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள் ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பொதுவாக தமிழ் ரசிகர்கள் பாடல்களை அதிகம் விரும்பி, ரசித்து வரவேற்பார்கள். அதனால் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே அவற்றில் இடம்பெறும் பாடல்கள் முதலில் வெளியாகும். பல படங்களின் வெற்றியைப் பாடல்கள் மட்டுமே தீர்மானித்துள் ளன.
எனினும், அண்மைய சில ஆண்டுகளில் ஒரு படத்தில் ஐந்தாறு பாடல்களுக்கு மேல் இடம்பெறுவதில்லை. இந்நிலையில் 'பியார் பிரேமா காதல்' படத்துக்காக 12 பாடல்க ளுக்கு மெட்டமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அவரது இசையில் அதிக பாடல்களைக் கொண்ட படமும் இதுதான். முழு நீளக் காதல் சித்திரமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவ டைந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண் மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் நிச்சயம் வெற்றி பெறும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
'பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாண், ரைசா.